வருகின்ற ஜூலை மாதத்திற்குள், சென்னை விமான நிலையத்தில் இரண்டு உள்நாட்டு முனையங்கள் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட 42,000- 44,000 பயணிகள் சென்னை மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு முனையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தற்போதைய சர்வதேச முனையம் (டி4) மே மாத இறுதிக்குள் புதிய ஒருங்கிணைந்த முனையத்திற்கு மாற்றப்படும். அதன் பிறகு உள்நாட்டு முனையமாக மாற்றப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலையில், இரண்டு உள்நாட்டு முனையங்கள் செயல்படும் என்பதால், சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளின் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிகம் வருகைதரும் நேரங்களில், பயணிகளின் அதிக கூட்டம், நீண்ட வரிசைகள் மற்றும் செக்-இன் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நீண்ட காத்திருப்பு ஆகியவை அதிக நேரத்தை எடுக்கிறது.
தற்போதைய சர்வதேச முனையம் (T4 டெர்மினல்) மாற்றியமைக்கப்பட்டு கூடுதல் முனையமாக மாற்றப்படும். சர்வதேச செயல்பாடுகள் ஒரு மாதத்திற்கு பிறகு புதிதாக துவக்கப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்திற்கு (T2 டெர்மினல்) மாற்றப்படும்.
மேலும் ஒரு உள்நாட்டு முனையத்தை உருவாக்குவது பயணிகளுக்கு நிம்மதியை அளிக்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா மற்றும் ஏர் ஏசியா எக்ஸ்பிரஸ் போன்ற விமான நிறுவனங்கள் ஜூலை மாதத்திற்குப் பிறகு T4 முனையத்தில் இருந்து செயல்படும்.
இண்டிகோ, ஆகாசா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் அலையன்ஸ் ஏர் போன்ற மீதமுள்ள விமான நிறுவனங்கள் தற்போதுள்ள உள்நாட்டு முனையத்தில் (டி1 டெர்மினல்) தொடர்ந்து செயல்படும்,” என்று அதிகாரி தெரிவித்தார்.
மே மாத இறுதிக்குள் சர்வதேச செயல்பாடுகளை புதிய ஒருங்கிணைந்த முனையத்திற்கு மாற்ற AAI திட்டமிட்டுள்ளது, அதன் பிறகு T4 முனையத்தில் மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil