சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) பகுதியில் வரும் மீனம்பாக்கம் வாகன நிறுத்துமிடத்தை சீரமைப்பதற்காக மூட முடிவுசெய்துள்ளனர்.

பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தை மூடியுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் வசதிக்காக, பார்க்கிங் இடத்தை விரிவுபடுத்த எடுக்கப்படும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ஸ்டேஷனில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், பயணிகளும் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil