வரும் 13 ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யு வாய்ப்பு

By: Updated: October 10, 2018, 10:22:41 AM

வரும் அக்டோபர் 13 ஆம் தேதி அரபிக்கடல், மத்திய தரைக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உரு மாறியுள்ளது. இது ஒரிசா மாநிலத்தின் தென்கிழக்கே 560 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திராவை நோக்கி நகரும்.

மத்திய அரபிக்கடலில் ஓமனுக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் லூபன் புயல் நிலை கொண்டுள்ளது. இது 24 மணிநேரத்தில் ஏமன் மற்றும் தெற்கு ஓமன் நோக்கி நகரும்

அக்.,13 வரை அரபிக்கடல், மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், வங்கக்கடலை பொறுத்தவரை மத்திய வங்கக்கடலில் அக்.,9-11 வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்

இன்று (10.10.18) மற்றும் நாளை 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யு வாய்ப்பு என சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai met dept warns fishermens to not go to deep

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X