தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுக்சேரி, காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பலகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னல் இருந்தாலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே இன்று சென்னை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்து வரும் நிலையில், தேனாம்பேட்டை, பெருங்குடி, மற்றும் கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“