வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மினிக்காய் தீவுகளுக்கு வட மேற்கு திசையில் 920 கி.மீ.தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது.
அது புயலாக வலுப்பெற்று ஓமன் கரை நோக்கி நகரக்கூடும். வங்கக்கடலில் அந்தமான் கடல்பகுதி மற்றும் அதை ஓட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்து வரும் 3 தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கரை நோக்கி நகரக்கூடும்.
மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் அக்.7 முதல் 12 –ம் தேதிவரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கக்கடலில் மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதியில் அக்.7 முதல் 9ம் தேதிவரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசையில் 13 செ.மீ. மழையும் நெல்லை சங்கரன்கோவில், குன்னூர், அம்பாசமுத்திரத்தில் 8 செ.மீ.மழையும் பெய்துள்ளது.
அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், குமரி, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போதைய நிலைவரை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நாளை விரிவாக கூறப்படும்.” என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: விலக்கப்பட்ட ரெட் அலர்ட்! விடாத மழை!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chennai meteorological department announcement
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
விஜய் மக்கள் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை – தந்தை சந்திரசேகருக்கு விஜய் பப்ளிக் நோட்டிஸ்
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : உதவியுடன் சசிகலா எழுந்து நடக்கிறார் – விக்டோரியா மருத்துவமனை
வேளாண் சட்டத்தை நிறுத்திவைக்க ஒப்புதல்: மத்திய அரசு முடிவுக்கு 5 காரணங்கள்