சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் கடலில் இலங்கை, குமரிக்கடல் மாலத்தீவு பகுதி அருகே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அடுத்த 36 மணிநேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடலில் மாலத்தீவுகளுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும்
இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் தெற்கு கேரளாவை ஒட்டிய கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும். சில சமயத்தில் 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரளாவை ஒட்டிய கடல்பகுதி, மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றப்பின், லட்சத்தீவு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதால்
மீனவர்கள் லட்சத்தீவுக்கு மார்ச் 12 முதல் 15 வரை செல்லவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தென் தமிழகத்தில் மார்ச் 12, 13, 14-ல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனியில் மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chennai meteorological department announcement