தென் தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம்

தென் தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்

By: Updated: March 14, 2018, 01:28:52 PM

குறைந்த கற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்கக் கூடும். இதனால், தென் தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று அளித்த பேட்டியில், “தென் கிழக்கு அரபிக் காலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 08.30 மணிக்கு மினிகாய் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 130 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணி நேரத்தில், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக் கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை முதல் (மார்ச்.15) படிப்படியாக தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலுவிழக்கக் கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக, தூத்துக்குடியில் 20செ.மீ மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 19செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில், அதாவது (14 , 15) தேதிகளில், தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யும். காற்றைப் பொறுத்தவரை, குமரிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும். மணிக்கு 40கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்தில், சமயத்தில் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள், குமரிக் கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு 14ம் தேதியும், தெற்கு கேரளா மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு 14  மற்றும் 15ம் தேதிகளில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai meteorological department report about rain

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X