வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நாளை முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/84pYfVGYuNmRZh7MQZFe.png)
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்து வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.