இந்த தீபாவளியில் இருந்து, சென்னை மெட்ரோவில் ஞாயிறுக்கிழமை போன்ற பொது விடுமுறை நாட்களில் பயணக் கட்டணம் பாதியாகக் குறைக்கும் திட்டம் தற்போது முடிவாகியுள்ளது.
2019 செப்டம்பர் மாதத்தில் மட்டும் ,மெட்ரோ இரயிலில் மொத்தம் 31,89,591 பயணிகள் பயணம் செய்துள்ளைர். இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போன்ற பொது விடுமுறை நாட்களில், மற்ற நாட்களை விட 50,000 மக்கள் குறைவாகவே பயணிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் அதிகாமான பயனர்களை ஈர்க்க பல்வேறு யுக்திகளை சென்னை மெட்ரோ சில மாதங்களாகவே யோசித்து வந்தது.
அதன் வெளிப்பாடாக , பயணக் கட்டணத்தை குறைத்து மக்களை ஈர்க்க மெட்ரோ நிர்வாகம் யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி, தற்போது உண்மையாகி உள்ளது.
சென்னை மெட்ரோவின் உயர்மட்டக் குழு கட்டணக் குறைப்பை விவாதித்துள்ளனர். இதற்கு, சென்னை மெட்ரோ கமிட்டியின் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. இதானால் பொது மக்கள் விடுமுறை நாட்களில், ஸ்மார்ட் கார்ட் வைத்து மெட்ரோவில் பயணம் செய்யும் மக்கள் குறைந்தபட்ச விலை ரூ. 4- லும் , அதிக பட்ச விலை ரூ. 27-லும் பயணம் செய்ய முடியும். ஸ்மார்ட் கார்ட் இல்லாத மக்கள், விடுமுறை நாட்களில் குறைந்த பட்சம் ரூ. 5 லும் , அதிகபட்சமாக ரூ. 30 லும் பயணம் செய்ய முடியும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகள் குறுகிய நேரத்தில் தங்களது சேருமிடத்தை சென்று சேர்ந்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.