அடையாற்றின் கீழ் சுரங்கம் தோண்டு பணி தொடங்கியது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக அடையாறு ஆற்றின் அடியில் நுழைந்தது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒரு பெரிய சாதனையை தற்போது கொண்டாடுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது. இதில் 3வது வழிதடத்தில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்கார்ட் வரை பணிகள் செல்ல பணிகள் நடபெற்று வருகிறது. இதில் காவிரி மற்றும் அடையாறு 2 தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை 1.226 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதில் காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை முடித்து, தற்போது வெற்றிகரமாக அடையாற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி உள்ளது.. அடையாறு சுரங்கம் தோண்டும் எந்திரம் 250 மீட்டர் தொலைவில். நெருக்கமாக பின்தொடர்ந்து 20 நாட்களுக்குள் அரையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியில் இருக்கிறது.
இந்த 2 சுரங்க தோண்டும் இயந்திரமும் அடையாறு சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, தி.வி.க பாலம் அருகே அடையாறு ஆற்றை கடந்து அடையார் சந்திப்ப நிலையத்தை அடைய முடியும்.
இந்த நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.. அர்ஜுனன் , தலைமை பொது மேலாளர்கள் டிலிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ், மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.