சென்னை மெட்ரோ :’FLYY’ மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்

சென்னை மெட்ரோ அறிமுகப்படுத்திய இந்த மின்சார பைக்கின் வித்தியாசம் என்னவென்றால்,நீங்கள் பயணிக்கும் நேரத்திற்கு பணம் செலுத்தினால் போதும்,தூரத்திற்கு அல்ல.

By: Updated: January 23, 2020, 08:57:09 AM

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் காசு மாசுபாட்டை குறைக்கவும், அதே நேரத்தில் பயனாளிகளின் சேவையை அதிகரிக்கவும் பல்வேறு முயர்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கிண்டி ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை ஆகிய நான்கு நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் இருந்தே சென்னை மெட்ரோ இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மின்சார பைக் சேவையை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பயணிகள் தங்களது ஃபோனில் ‘FLYY’என்கிற ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். ஒடிபி மூலம் சில சம்பிரதாயங்களை முடிக்க வேண்டும் (உதாரணமாக, ஓட்டுநர் உரிமத்தை பதிவேற்றம் செய்வது)

இந்த ஆப்பின் மூலம், உங்கள் அருகில் இருக்கும் FLYY மின்சார பைக்கை தேர்வு செய்யுங்கள் (கிட்டத்தட்ட ஓலா கேப்பை தேர்வு செய்வது போலத்தான்).

பின்னர், அந்த ஸ்கூட்டர் இருக்கும் இடத்திற்கு சென்று அதில் இருக்கும்  க்யு.ஆர் கோடை ஸ்கேன் செய்தால் உங்கள் பைக் தயாராகி விடும். (பைக்கிற்கு தனியாக சாவி என்று எதுவும் இல்லை)

FLYY  செயலியை எப்படி பயன்படுத்துவது :  நீங்கள், பயணம் செய்யும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவேளை நீங்கள் வாகனத்தை ஒட்டவில்லை என்றால் நீங்கள் FLYY செயலியில் ‘Pass Raid. என்பதை தேர்வு செய்ய வேண்டும். அத்தகைய சூழலில் நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். (எல்லாம் ஜிபிஎஸ் மூலம் கணக்கிடப்படுகிறது)

நீங்கள் உங்கள் பயணத்தை முடித்துவிட்டு FLYY சேவைகளை வழங்கிவரும் எந்த ரயில் நிலையத்திலும் வண்டியை நிறுத்திவிட்டு செல்லலாம்.

பயனர்களே, இந்த FLYY செயலியின் வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் பயணிக்கும் நேரத்திற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும், தூரத்திற்கு அல்ல .

அதாவது, அண்ணா நகர் ‘டு’ நந்தனம் பகுதியை, இந்த ஸ்கூட்டர் மூலம் 5 நிமிடத்தில் வந்துவிட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை வெறும் ரூ.5 . ஏனெனில்,மின்சார பைக்குகள் பெட்ரோல்/ டீசலால் ஒடுவதில்ல. எலெக்ட்ரிக் பேட்டரி மூலம் இயங்குகிறது.

இதனால், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த ஒருவர் இனிமேல் ஓலா கேப், அரசு பேருந்து, ஆட்டோ போன்றவைகளுக்கு காத்திருக்காமல்  ஒரு க்யு.ஆர் ஸ்கேன் மூலம் பயனர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai metro introduced e vehicles in 4 metro station flyy app rental serivce

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X