சென்னை மெட்ரோ ரயில் சேவைகளில் பயணிக்க இனி வாட்ஸ்- அப் மூலமாக பயணசீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மெட்ரோ ரயில்களுக்காக பயண அட்டை பெறுவதற்கு, க்யூ ஆர் கோடு ஆகியவற்றை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க வாட்ஸ் ஆப் வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி நடைமுறைப் படுத்தியுள்ளனர்.
வாட்சப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
8300086000 என்ற கைப்பேசி எண்ணுக்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி டிக்கெட்களை பெறலாம். கைப்பேசி மூலம் பதிவு செய்வதால் 20% சதவீதம் தள்ளுபடி என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil