டிஜிட்டல் க்யூஆர் டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை இனி தவிர்க்கலாம்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) இந்த நோக்கத்திற்காக போன் பே (PhonePe) உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
பயணிகள் இப்போது போன் பே செயலி மூலம் நேரடியாக டிஜிட்டல் QR டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த சேவையில் தற்போது 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.
சென்னை நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் சித்திக், க்யூஆர் அடிப்படையிலான டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தினார்.
சிங்கிள் ஜர்னி டிக்கெட், ரிடர்ன் ஜர்னி டிக்கெட்ஸ் மற்றும் ஸ்மார்ட் கார்ட் ரிசார்ஜ் ஆகிய பயணிகளுக்கான மூன்று முக்கிய சேவைகளை போன் பே படிப்படியாக செயல்படுத்தும்.
தற்போது, முதல் கட்டமாக, சிங்கிள் ஜர்னி டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு செயல்படுத்தப்பட்டுள்ளது, மற்ற இரண்டு சேவைகளும் விரைவில் செயல்படுத்தப்படும்.
பயணிகள் ஒரு டிவைசில் இருந்து ஒரே நேரத்தில் ஆறு நபர்களுக்கு இ-டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம், மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அதை ஸ்கேன் செய்து தங்கள் பயணத்தைத் தொடங்கலாம்.
PhonePe இல் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
1. PhonePe செயலியை ஓபன் செய்து Switch செக்ஷனுக்கு செல்லவும்
2. Taxi & Metro கேட்டகிரியின் கீழ், Chennai Metro ஐகானை செலக்ட் செய்யவும்.
3. ஏறும் மற்றும் இறங்கும் ஸ்டேஷன், பயணிகளின் எண்ணிக்கையை Enter செய்யவும்
4. UPI மூலம் பணம் செலுத்தவும்
5. பணம் வெற்றிகரமாக செலுத்திய உடன் PhonePe செயலியில் டிஜிட்டல் QR Code ஜெனரேட் ஆகும். மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அதை ஸ்கேன் செய்து நீங்கள் பயணிக்கலாம்.
தரவுகளின் படி மே 17 முதல் நவ.15 வரையில் வாட்ஸ் ஆப் மூலம் 9,34,882 பயணிகளும், ஆக.4 முதல் நவ.15-ஆம் தேதி வரை பேடிஎம் செயலி மூலம் 9,26,301பயணிகளும் பயணச்சீட்டு பெற்று பயணித்துள்ளனா்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“