New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-14T160218.669.jpg)
chennai, chennai metro, metro rail, cmrl, share auto, share taxi, tempo, metro passengers, january,
Chennai metro : சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சிக்களில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் பேர் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
chennai, chennai metro, metro rail, cmrl, share auto, share taxi, tempo, metro passengers, january,
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சிக்களில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் பேர் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பல போக்குவரத்து இணைப்பு சேவைகளை வழங்கி வருகிறது.
ஜனவரி மாதத்தில் 43 ஆயிரத்து 745 பயணிகள் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகளையும், 29 ஆயிரத்து 425 பயணிகள் மெட்ரோ வேன் இணைப்பு சேவைகளையும், 14 ஆயிரத்து 531 பயணிகள் ‘டெம்போ’ வேன் இணைப்பு சேவையையும் பயன்படுத்தி உள்ளனர்.
அந்தவகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரத்து 701 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஷேர் ஆட்டோ, டாக்சி, மெட்ரோ வேன் இணைப்பு மற்றும் டெம்போ வேன் சேவையை 9 லட்சத்து 58 ஆயிரத்து 352 பேர் பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.