படம் டவுன்லோடு பண்ண வேண்டுமா?. மெட்ரோ ரயில்ல போங்க, ஜமாய்ங்க…

Chennai metro : விரும்பிய திரைப்படங்கள், பாடல்களை கண்டுகளிக்க வேண்டுமா, டவுன்லோடு செய்தும் பார்ப்பதற்கான வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

By: Published: February 25, 2020, 4:27:07 PM

விரும்பிய திரைப்படங்கள், பாடல்களை கண்டுகளிக்க வேண்டுமா, டவுன்லோடு செய்தும் பார்ப்பதற்கான வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, சென்னை மக்களின் ஆபாந்பாந்தவனாக விளங்குகிறது. இந்நிலயைில், தங்களது பயணிகளை மேலும் மகிழ்விக்கும் பொருட்டு, அதிவேக வைபை சேவையை வழங்க உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் ‘சுகர்பாக்ஸ்’ என்ற ஆப் மூலம் ரயிலுக்குள்ளான பொழுதுபோக்கு அமைப்பை உருவாக்கவுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் போது வீடியோக்கள், திரைப்படங்களை இலவசமாகப் பார்க்கவும் டவுன்லோடு செய்யவும் பயணிகளைக் கவரும் விதமாக இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக உருவாக்கப்படும் வைபை மூலம் திரைப்படங்கள், வீடியோக்களை பார்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

பயணிகள் செய்ய வேண்டியதெல்லாம் சுகர்பாக்ஸ் என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீடியோக்களை இலவசமாகப் பார்க்கலாம். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகியவை உட்பட்ட மொழிகளில் பயணிகள் தொலைக்காட்சித் தொடர்கள் முதல் திரைப்படங்களை பயணத்தின் போதும் பார்க்கலாம் அல்லது டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டு ஆஃப் லைனிலும் பார்க்கலாம். திரைப்படம் ஒன்றை டவுன் லோடு செய்ய ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான். இந்த ஆப் இத்தகைய அதிவேக டவுன்லோடு வசதி கொண்டத்ஹகும். பயணத்தின் போது பயணிகளை மகிழ்விக்கவும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கவ இந்த ஏற்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai metro metro rail passengers wifi movies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X