ஆடைகள் பறக்க ஆசையா?. மெட்ரோ ரயில்ல போங்க, கலக்குங்க..

Chennai metro : உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் அழகிய லைலா பாடலில் ரம்பாவின் ஆடைகள் பறப்பது போன்ற அனுபவத்தை பெற விருப்பமா?. உங்கள் ஆசையை விரைவில் நிறைவேற்ற இருக்கிறது சென்னை மெட்ரோ.

chennai, chennai metro, metro rail, ventilation, metro rail second phase, chennai traffic, cmrl

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் அழகிய லைலா பாடலில் ரம்பாவின் ஆடைகள் பறப்பது போன்ற அனுபவத்தை பெற விருப்பமா?. உங்கள் ஆசையை விரைவில் நிறைவேற்ற இருக்கிறது சென்னை மெட்ரோ.

சென்னை மக்களின் போக்குவரத்து பிரச்சனைகளை, சென்னை மெட்ரோ நிறுவனம் பெரிதும் தீர்த்து வருகிறது. மெட்ரோ முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து தற்போது ரயில் சேவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இரண்டாம் கட்ட பணிகளும் விரைவில் நிறைவடைய உள்ளன.

சென்னை மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சென்னை மெட்ரோ ரயில் சேவையில், மேலும் பயணிகளை திருப்திபடுத்தும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளில், புது அம்சமாக மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில், நடைபாதைகளின் கீழ்ப்பகுதியில் வெண்டிலேசன் வசதி செய்யப்பட உள்ளது. காற்று மேல்நோக்கி வரும் என்பதால் மெட்ரோ ரயில் ஸ்டேசனில் உள்ளவர்கள் மட்டுமல்லாது அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளவர்களுக்கும் காற்று வசதி கிடைக்க இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதலாம் கட்ட மெட்ரோ சேவையில், ஸ்டேசன்களில் 14 மீ உயரத்திற்கு தூண்கள் அமைக்கப்பட்டு வெண்டிலேசன் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில் இந்த கட்டமைப்பு அகற்றப்படுவதால், பொருட்செலவு குறைவதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவன உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

சியோல், லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் இந்த நடைமுறையே பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai metro metro rail ventilation cmrl

Next Story
இந்தியன் 2 விபத்து – சம்பவ இடத்தில் படக்குழுவினரிடம் நேரில் விசாரணைkamalhaasan, indian2, indian 2 accident, director shankar, central crime branch, police, investigation, chennai high court, madras high court,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express