சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை எத்தனை மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பதை குறித்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் பயணம் செய்யாதவர்களும் கூட வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கமாக நிகழ்ந்து வருகிறது.
சென்னையில் பரங்கிமலை, திரிசூலம் பகுதிகளில் இருந்து மின்சார ரயில்களில் செல்பவர்கள் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களை தங்களின் வசதிக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ரயிலில் பயணம் செய்யாமல் வாகனம் நிறுத்தும் இடங்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் ஆனது நாளை மறுநாள் முதல் உயர்த்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil