scorecardresearch

பயணிகள் பாதுகாப்பு முக்கியம்: 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி

சென்னை மெட்ரோ பேஸ் 2-ல், திரை கதவுகள் அமைப்பதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

chennai metro
CMRL

ஓட்டுநர் இல்லாத ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பிற்காக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அனைத்து நிலையங்களிலும் 2 ஆம் கட்டத்தில் பிளாட்பார்ம் திரை கதவுகளை (PSD) நிறுவ திட்டமிட்டுள்ளது.

பூந்தமல்லியில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான 18 உயர்த்தப்பட்ட நிலையங்களுக்கு அரை-நீள திரை கதவுகள் மற்றும் லைட் ஹவுஸ் முதல் கோடம்பாக்கம் வரையிலான ஒன்பது நிலத்தடி நிலையங்களுக்கு முழு நீள திரை கதவுகள் நிறுவ முடிவெடுத்துள்ளனர்.

தற்போதைய கதவு அமைப்புடன் ஒப்பிடும் போது இது பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் பறக்கும் தொடருந்துத் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை கொண்டுவர, தனியார் நிறுவனத்திற்கு ( Aarvee Associates Architects Engineers & Consultants Private Limited) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

சமீபத்திய கூட்டத்தில், CMRL அதிகாரிகள் 75 நாள் காலக்கெடுவுக்குள் திட்டத்தை முடிக்க முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai metro phase 2 platform screen doors for rs 100 crores