/tamil-ie/media/media_files/uploads/2019/10/Chennai-Metro-1.jpg)
chennai, Chennai Metro Phase II,Madhavaram-Taramani underground stretch,Chennai Metro corridor, metro rail, cmbt, taramani, poonamallee, சென்னை, சென்னை மெட்ரோ, இரண்டாம் கட்ட பணிகள், மாதவரம், தரமணி, கோயம்பேடு, மெட்ரோ ரயில்
சென்னை மக்களின் போக்குவரத்து வசதிக்கு ஆபாந்பாந்தவனாக விளங்கிவரும் மெட்ரோ ரயில், அதன் இரண்டாம் கட்ட பணிகள், 2020ம் ஆண்டின் பிற்பகுதியில் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
118.9 கி.மீ தொலைவு கொண்ட இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள், 3 வழித்தடங்களில் நடைபெற உள்ளன.
மாதவரம் முதல் சிப்காட் வரை 3வது வழித்தடம்
ஆயிரம் விளக்கு முதல் பூந்தமல்லி வரை 4வது வழித்தடம்
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5வது வழித்தடமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மாதவரம் முதல் தரமணி வரையிலான 52 கி.மீ. தொலைவிலான பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள், புரசைவாக்கம், ஸ்டெர்லிங் சாலை, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரம் முதல் தரமணி வரையிலான வழித்தடத்தில் சுரங்கப்பாதையில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளுக்கு அதிக காலம் பிடிக்கும் என்பதால், இந்தபகுதியில் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரம் முதல் சிப்காட் வரையிலான 3வது வழித்தட பணிகள் முடிவடைந்தவுடன், மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் 5 சுரங்கப்பாதை ஸ்டேசன்கள் என 11 மெட்ரோ ஸ்டேசன்கள் அமைய உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.