சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட நீட்டிப்பு திட்டம், COVID-19 வைரஸால் தாமதமாகலாம். வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் அடுத்த விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரிவாக்கத் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை ஓட்டம் நடத்தவும், ஜூனில் ரயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஏன் தாமதம்: கொரோனா வைரஸால் உலகில் பல நாடுகளை சேர்ந்த 3000-க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். மேலும், சீனாவில் தொழில் உற்பத்தியையும் பாதித்தது . இதனால், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப்பணிகளுக்கு தேவைப்படும் முக்கிய கூறுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபடுவதில் தாமதம் நிலவுகிறது.
உதரணமாக, மெட்ரோ ரயில் பிளாட்பார்ம் திரைக் கதவுகளுக்கு தேவைப்படும் பாகங்கள், லிஃப்ட், மின் உபகரணங்கள் போன்ற கூறுகள் சீனாவில் இருந்து வாங்கப்படுவது வழக்கம்.
பயனாளிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் பிளாட்பார்ம் திரைக் கதவுகள்
தாமத்தை தவிர்க்க ? தாமதத்தை தவிர்க்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மற்ற நாடுகளில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ தேவைப்படும் கூறுகளை அடையாளம் காணுமாறு ஒப்பந்தக்காரர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.
இருப்பினும், சீனாவில் இருந்து கூறுகளை இறக்குமதி செய்வது வணிகர்களுக்கு லாபகரமாக இருக்கும். தற்போது, மற்ற நாடுகளை அடையாளம் காண வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால், ஒட்டு மொத்த திட்ட நிதி மேலான்மையில் தாகத்தை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், விரிவாக்கத் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஜூன் மாதத்தில் ரயிலை இயக்கவும் ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.