சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டமைப்பிறகாக வரும் ஆண்டிற்கு 3,100 கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisment
மேலும், முதல் கட்ட மூலதலத்திற்கான 50% பங்கை மத்திய அரசு வழங்கியது போல், இரண்டாம் கட்ட பணிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது .
சென்னை மெட்ரோ:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோமீட்டர் நீலமுள்ள மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் விரைவில் முடிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கின்றது.
மாதவரம் முதல் சோலிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்கலுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளத்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புது வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிருவனங்களிடம் இருந்து, இரண்டாம் கட்டத்தின் எஞ்சியுள்ள, சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் மற்றும் சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலுமான வழித்தடப் பகுதிகளுக்கு, நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நிதி அமிச்ச்சர் தெரிவித்தார்.
எனவே, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு மதிப்பீடுகளில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலைக் கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார்.