/tamil-ie/media/media_files/uploads/2019/08/metro.jpg)
metro phase II - niti aayog approval
Chennai Metro Phase II: சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) தனது இரண்டாம் கட்ட திட்டத்திற்காக பல்வேறு சர்வதேச வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்கான ஒப்புதலை இந்திய அரசின் திங்க் டேங் நிதி ஆயோக் இறுதியாக அளித்துள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் , "69,180 கோடி செலவில் மூன்று காரிடர்கள் மூலம் 118.9 கி.மீ தூரத்தை இணைக்கும் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கு பெரும் நிதி தேவைப்படுகிறது ,
உள்நாடு மற்றும் வெளிநாடு நிதி நிறுவனங்களில் இருந்தும் நிதியைத் திரட்ட முடிவு செய்திருந்தோம்... எனவே, நிதி ஆயோக்கின் ஒப்புதல் எதிர்பார்த்த ஒன்றே" எனக் கூறினார்.
இந்த இரண்டாம் கடத்திர்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் ஏற்கனவே ₹20,196 கோடி கடனாய் பெரும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிட்டத் தக்கது. ஆசியன் டெவலப்மென்ட் பேங்க், நியூ டெவலப்மென்ட் பேங்க், உலக வங்கி போன்ற வங்கிகளிடம் இருந்து நிதி திரட்ட சென்னை மெட்ரோ லிமிடெட் திட்டம் போட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் படி, வெளிநாட்டு நிதி நிறுவங்களில் கடன் வாங்கும் மாநில அரசிகளின் வரையறை தீர்மானிக்கும் உரிமை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மாநில அரசாங்கம் எல்லையை மீறி கடன்வாங்கும் போது, மத்திய அரசு அவ்வப்போது விளக்கமும் கேட்கும். அந்த வகையில் தான் , சென்னை மெட்ரோ லிமிட் சில பல கேள்விகளுக்கு நிதி ஆயோக்கிடம் சமர்பித்து தற்போது ஒப்புதல் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.