சென்னையின் மெட்ரோ ரயில்சேவைக்கான இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் ரூ.63,246 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட திட்டத்தின் படி, நான்காவது மற்றும் ஐந்தாவது வழித்தடத்தில் உயர்மட்ட பாதையை பல்வேறு இடங்களில் அமைப்பதற்கு சுறுசுறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வழித்தடங்களில் மொத்தம் 400 தூண்களை இதுவரை அமைத்துள்ளன.

மாதவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோமீட்டருக்கு மூன்றாவது வழித்தடம், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கிலோமீட்டருக்கு நான்காவது வழித்தடம், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோமீட்டருக்கு ஐந்தாவது வழித்தடம் ஆகும்.
இவற்றில், 42.2 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்கத்திலும், 76.3 கிலோமீட்டர் தொலைவிற்கு உயர்மட்டத்திலும் பாதைகள் அமைக்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டிற்குள் இப்பணிகளை முடிப்பதற்கு கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோல தற்போது 45க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.
பூந்தமல்லியில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை 16 கிலோமீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட பாதையும், மீதமுள்ள 10.1 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்கப் பாதையும் அமைக்கவுள்ளனர்.
18 உயர்மட்ட ரயில் நிலையங்கள் மற்றும் 12 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என்று மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கலங்கரை விளக்கத்தில் இருந்து பவர்ஹவுஸ் வரை உயர்மட்ட பாதையில் மொத்தம் 816 தூண்கள் அமைக்கப்பட உள்ள நிலையில், இதுவரை 283 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தில் சுரங்க மெட்ரோ நிலையங்களும், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லைதோட்டம் மற்றும் பல இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், சாஸ்திரி நகர், எல்காட், உள்ளகரம், கத்திப்பாரா, ராமாபுரம், முகலிவாக்கம், கோயம்பேடு, ரெட்டேரி சந்திப்பு ஆகிய இடங்களிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil