Chennai Metro Price discounts on Sunday: பொதுவாகவே, அரசு பேருந்துகளில் வாரவேலை நாட்களில் கூடம் அதிகமாக இருக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் சற்று வெறிச்சோடிய நிலையில் காணப்படும். இதே நிலை தான் சென்னை மெட்ரோ ரயிலிலும் உள்ளது. உதரனமகாக, ஞாயிற்றுக்கிழமைகளில் வார நாட்களை விட 50,000 மக்கள் குறைவாகவே சென்னை மெட்ரோ ரயிலில் பயனிக்கின்றனர்.
எனவே, ஞாயிறு மற்றும் மற்ற பொது விடுமுறை நாட்களில் பயனர்களை வருகையை அதிகரிக்க சில நாட்களாகவே சென்னை மெட்ரோ யோசித் து வந்தது. இதன் வெளிப்பாடாக, சென்னை மெட்ரோ ரயிலில ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு 50% கட்டண தள்ளுபடியை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்த தள்ளுபடித் திட்டங்களைப் பன்முகத் தன்மையோடு யோசித்து வருகிறது சென்னை மெட்ரோ. வெறும், ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாமல் பிற பொது விடுமுறை நாட்களிலும் இதை விரிவுப்படுத்தலாம் என்ற கோணத்திலும் யோசித்து வருகிறது . வருடத்தில் எதேனும் குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் தள்ளுபடியை அமல் படுத்தலாமா? அல்லது வருடம் முழுவதும் இதை நீட்டிக்கலாமா? என்ற யோசனையிலும் உள்ளது.
எனவே, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், விடுமுறை நாட்களிலும் அதிகமான மக்கள் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது, என்று நம்பப்படுகிறது. கடந்த ஆண்டும், மக்களை ஈர்க்கும் விதமமாக, ஒரு வாரத்திற்கு மட்டும் 40% தள்ளுபடியை வழங்கியது என்பது குறிப்பிடத் தக்கது.