Advertisment

சென்னையில் 11 மெட்ரொ ரயில் நிலையங்களில் பயண அட்டை ரீசார்ஜ் நிறுத்தம்... பார்க்கிங் பாஸ் இல்லை

சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை விற்பனை, முதற்கட்டமாக, 11 மெட்ரோ ரயில் நிலையங்களில், ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai Metro Rail Limited, CMRL, சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ் வருகிற பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டையுடன், கூடுதலாக கடந்த 2023 ஏப்ரல் 14-ல், 'சிங்கார சென்னை அட்டை' அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டை, ஏப்ரல் 1 முதல் முழு பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் காரணமாக, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், படிப்படியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளது.

Advertisment

முதற்கட்டமாக, புது வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, ஓ.டி.ஏ., நங்கநல்லுார் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம், செனாய் நகர் ஆகிய, 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.

இந்த ரயில் நிலையங்களில், பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டு உள்ள பயணியர், பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை ஏப்., 1க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பின், மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாகன நிறுத்தம் செய்ய, 'சிங்கார சென்னை அட்டை' பெற்று பயன்படுத்தும்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து போக்குவரத்துக்கும் சிங்கார சென்னை அட்டை பயன்படுத்த வழிவகை செய்யப்படுவதால், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Advertisment
Advertisement

அதே போல, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ் வருகிற பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ் வருகிற பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும்.

பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜனவரி 2025-ல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை (Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி முதற்கட்டமாக 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

01.04.2025 முதல் எஸ்பிஐ வழங்கிய தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, ஓடிஏ- நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய் நகர் ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனை / ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

அதன்படி, மேற்கூறிய மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு அல்லது மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்திவிட்டு, மேலும் பயன்பாட்டிற்காக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னைஅட்டை) பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Metro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment