/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-19T170213.999.jpg)
சென்னை மக்களின் போக்குவரத்துக்கு ஆபாந்பாந்தவனாக விளங்கும் சென்னை மெட்ரோ ரயிலில், பயணிகள், சைக்கிள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை மெட்ரோ ரெயில் இப்போது சைக்கிளை எடுத்துக்கொண்டு வருபவர்களை, சைக்கிளோடு பயணிக்க அனுமதி அளித்துள்ளது, இந்த புதிய திட்டப்படி சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் என்றால், மெட்ரோ ரயிலில் நீங்கள் விரும்பிய இடத்தில் இறங்கி அங்கிருந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சைக்கிளிலேயே சென்றுவிடலாம்.
இனி காத்திருக்கதேவையில்லை : மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வீடு அல்லது அலுவலகம் அல்லது செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாக சென்றுவர முடியும். கார்கள் மற்றும் ஆட்டோரிக்ஷாக்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
முதல் மெட்ரோ : "பயணிகள் தங்கள் சைக்கிளுடன் பயணிக்க அனுமதிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் வசதி நாங்கள் தான். இது நாங்கள் மேற்கொண்டுள்ள சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பயணிகள் சிறிய மற்றும் மடிக்கக்கூடிய சைக்கிள்களை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் . எங்கள் மெட்ரோ நிலையங்களில் உள்ள லிப்டில் பொருத்தக்கூடிய சைக்கிள் மட்டுமே அனுமதிக்கப்படும். சைக்கிள்களை ஏற்றிச் செல்லும் பயணிகள் சிறப்பு வகுப்பில் மட்டுமே பயணிக்க முடியும், ஏனெனில் சைக்கிள்களுடன் சாதாரண பெட்டியில் பயணித்தால் அது மற்ற பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படத்தும் எனவே சிறப்பு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கிறோம் என மெட்ரோ ரயில் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.