/indian-express-tamil/media/media_files/QD9ls0Y2to11qgq5JI1A.jpg)
Chennai Traffic Diversion
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணி நடப்பதால் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை பகுதிகளில் இன்று, நாளையும் (மார்ச் 9, 10) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேத்துப்பட்டில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடோஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலைவழியாக அண்ணா மேம்பாலத்தை அடையும் வகையில்திருப்பி விடப்படும். இந்தமாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.
#TrafficDiversion due to @cmrlofficial Work at Santhome High Road from 09.03.2024 for one week.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) March 7, 2024
Motorists and public are requested to co-operate.#roadraja#GCTP#YourSafetyIsOurPriority@SandeepRRathore@R_Sudhakar_Ipspic.twitter.com/lrQEBGCpWB
இதேபோல், அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, டாக்டர் எம்ஜிஆர்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடது புறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.
வள்ளுவர் கோட்டத்திலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை,உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம்.
மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்துக்குத் தகுந்தபடி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். வாகனங்களில் செல்வோர் இதற்கு ஏற்ப பயணிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.