Advertisment

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றம்

சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, அப்பகுதியில் மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai city bus

Chennai MTC Bus Traffic Diversion

சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, அப்பகுதியில் மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்.18D, 18P, M1, 45ACT நாளை முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது.

மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு, வாணுவம்பேட்டை வழியாக NGO காலனி பேருந்து நிலையத்திற்கு 14M வழித்தடதிலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

தடம் எண்.M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

chennai

தற்போது தடம் எண்.76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு. காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18c, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளதாக’, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment