Advertisment

பெண் பயணிகளுக்கு சிறப்பு ஹெல்ப்லைன் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2023-க்கு இடையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு முடிவுகளின் அடிப்படையில், பெண் பயணிகளுக்கு சிறப்பு ஹெல்ப்லைன் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Metro trains, metro rail in trichy, metro rail in salem, metro rail in tirunelveli, nellai, Trichy Salem and Nellai Detailed Feasibility report submission, Feasibility report submission, திருச்சி, சேலம், நெல்லை மாநகர்களுக்கு மெட்ரோ ரயில் சேவை, சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிப்பு, Metro trains Trichy Salem and Nellai, Feasibility report submission

பெண் பயணிகளுக்கு சிறப்பு ஹெல்ப்லைன் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

அனைத்து பயணிகளுக்கும் ஒரு பொது ஹெல்ப்லைன் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தாலும், ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2023-க்கு இடையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு முடிவுகளின் அடிப்படையில், பெண் பயணிகளுக்கு சிறப்பு ஹெல்ப்லைன் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது.

Advertisment

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் முறையாக, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெண் பயணிகளுக்காக சிறப்பு ஹெல்ப்லைனைத் தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளின் கருத்துப்படி, அவர்கள் நான்கு இலக்க ஹெல்ப்லைன் எண்ணை நாடியுள்ளனர். சமீபத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆகிய இரண்டிற்கும் கடிதம் எழுதியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்) ஏற்கனவே 1 86042 51515 என்ற பொது ஹெல்ப்லைன் எண் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஹெல்ப்லைன் எண் 8 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மெட்ரொ ரயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து செயல்பட்டு வருகிறது.

“அண்மையில் நடத்தபட்ட கருத்துக் கேட்பு ஒன்றில், சிறப்பு ஹெல்ப்லைன் உருவாக்க வேண்டும் என்று பெண் பயணிகள் பரிந்துரைத்ததை அடுத்து நாங்கள் அதை செயல்படுத்த முடிவு செய்தோம். இந்த கருத்துக் கேட்பில் பெரும்பாலான பெண்கள் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக உணர்ந்ததாகவும், ஆனால் சில குறைபாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை எடுத்துரைத்ததாகவும் கூறியுள்ளனர். விரைவில் சிறப்பு ஹெல்ப் லைன் எண் கிடைக்கும் என நம்புகிறோம். இது அதிகமான பெண் பயணிகளை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்த ஊக்குவிக்கும்” என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மேலும், “எங்களுக்கு ஹெல்ப் லைன் எண் வழங்கப்பட்டவுடன், அது மெட்ரோ ரயில் சேவை சிஸ்டம் முழுவதும் காட்டப்படும் - மெட்ரோ ரயில் நிலையப் பகுதிகள், ரயில்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் - இதனால் சிக்கலை எதிர்கொள்ளும் எவரும் விரைவாக எங்களை அணுகலாம். பொதுவான ஹெல்ப்லைன் இருந்தாலும், பதினொரு இலக்கங்கள் உள்ளன. அதேசமயம், இது நான்கு இலக்க எண்ணாக இருக்கும், டயல் செய்ய எளிதாக இருக்கும். அவசரநிலையின் போது, ஒவ்வொரு நொடியும் கணக்கிடப்படுகிறது” என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சென்னையில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 12,000 பெண்கள் பங்கேற்றனர். ரயில்கள் மற்றும் நிலையங்களைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பது முதல் வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் வரை, கருத்துக்கணிப்பு பலவிதமான கேள்விகளை உள்ளடக்கி இருந்தது. இந்த கருத்துக் கேட்பு முடிவுகளின் அடிப்படையில், சி.எம்.ஆர்.எல் ஹெல்ப்லைன் தொடங்கும் வசதி உட்பட சில நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

Chennai Metro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment