சென்னை மெட்ரோ ரயிலின் சுரங்கப்பாதை பணிக்காக, பனகல் பார்க் தயாராகி வருகிறதுஇது இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
விரைவில்இரண்டு சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் (TBM) தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் இடையே நிலத்தடி வலையமைப்பை உருவாக்கும்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் அமைகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான(26.1 கி.மீ.) 4வது வழித்தடமும் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும்பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும் 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போதுஉயர்மட்ட மற்றும் சுரங்கப்பாதை பணிகள்ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்டபாதையில் 50 சதவீதம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டு டிசம்பருக்குக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது. இந்த குறிப்பிட்ட பாதை மக்கள் பயன்பாட்டுக்காக 2025ம் ஆண்டு இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில்இந்த வழித்தடத்தில் பனகல் பூங்காவில் சுரங்கப்பாதை தோண்டும் பணி இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக 'பெலிகன்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.கோடம்பாக்கம் வரைசுமார் 2 கி.மீ. தூரம் வரை துளையிடும்.
இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் பிறகு அடுத்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படும்.
இன்னும் ஓராண்டில் தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் இடையே இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், ”பனகல் பூங்காவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியதும் சுமார் 20 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு படிப்படியாக இயந்திரம் கோடம்பாக்கம் அருகே வரும்போது 25 மீட்டர் ஆழம் வரை துளையிடும்.
புவி தொழில்நுட்ப ஆய்வில் இந்த ஸ்ட்ரெட்ச் பெரும்பாலும் களிமண் மண்ணால் ஆனது. மேல் அடுக்கில் சில மணல் மண் கொண்டது. ஒரு சில இடங்களில் பாறைகளும் இருக்கலாம். இது கடினமாக இருக்காது, மேலும் ஒரு வருடத்தில் வேலையை முடிப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தின் ரயில் பாதையின் கீழ் சிறிய அளவிலான சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் துளையிடப்படும்.
எந்த இடையூறும் அல்லது அதிர்வும் ஏற்படாமல் இருப்பதற்காக ரயில் பாதைக்கு அடியில் செல்லும் இயந்திரத்தின் வேகம் வெகுவாகக் குறைக்கப்படும். ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடரும். அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை ரயில்வேயிடம் இருந்து ஏற்கனவே பெற்றுள்ளோம். டிராக் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் இயக்கம் மற்றும் வேகத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்”என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“