scorecardresearch

Chennai Metro Rail: வாங்க… மொபைல் ஸ்கேன் பண்ணுங்க… போய்கிட்டே இருங்க..

Chennai Metro Rail QR ticketing: பயணிகள் தங்களது மொபைல் ஆப்பில் இந்த QR கோடை ஸ்கேன் செய்து எளிதில் டிக்கெட் வாங்கி பயணிக்க முடியும்.

Chennai Metro Rail Limited, CMRL, சென்னை மெட்ரோ
Chennai Metro Rail Limited, CMRL, சென்னை மெட்ரோ

QR based ticketing to Launch in Chennai Metro Rail: நீண்ட வரிசை, பணம், வேலட் இப்படி எதுவும் தேவையில்லை. சென்னை மெட்ரோ பயணிகள் ஹாயாக நடந்து வந்து, தங்களிடம் இருக்கும் செல்ஃபோனில் QR – கோடை ஸ்கேன் செய்து, சிரமமின்றி டிக்கெட் வாங்கி மெட்ரோவில் பயணிக்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் எனப்படும் CMRL விரைவில் இந்த QR கோடு டிக்கெட்டை நடைமுறைப்படுத்தவிருக்கிறது. இதன் மூலம் பயணிகள் தங்களது மொபைல் ஆப்பில் இந்த QR கோடை ஸ்கேன் செய்து எளிதில் டிக்கெட் வாங்கி பயணிக்க முடியும்.

பயணிகள் விரும்பினால், QR கோட்டிற்கு காகித டிக்கெட்டைப் பெறலாம். இது கவுண்டர்களில் கிடைக்கும். இதற்கான டெண்டரையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.

இந்த டெண்டரின் படி, QR ஸ்கேன் மூலம் டிக்கெட் பெற விரும்புபவர்கள் அதற்கான தொகையை, மொபைல் அப்ளிகேஷன், வேலட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது QR கோடை ஸ்கேன் செய்து அதற்கான காகித டிக்கெட் பெற்று கவுண்டரில் பணமாகவோ செலுத்தலாம்.

QR கோடு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மெட்ரோ பயணிகள், அவர்களது கார்டை எப்போதும் தங்களுடன் வைத்திருக்கவோ, அதனை ரீ-சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமோ இல்லை. அதோடு மற்றவர்கள் வரிசையில் நின்று டிக்கெட் பெறவும் தேவையில்லை.

ஏற்கனவே இருக்கும் CMRL ஆப், QR ஸ்கேனுடன் விரைவில் அப்டேட் செய்யப்படும் எனும் மெட்ரோ அதிகாரிகள், இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படுவதோடு, நிதி கணக்குகளை கையாள மெட்ரோ பணியாளர்களுக்கும் எளிதாக இருக்கும் என்கிறார்கள்.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai metro rail qr ticketing

Best of Express