scorecardresearch

மாதவரம் டு சோளிங்கநல்லூர் மெட்ரோ பணிகள் தொடங்க ஏற்பாடுகள் தயார்: ரூ.299 கோடி ஒப்பந்தம்

சமீபத்தில் 299 கோடி ரூபாய்க்கு லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஏற்புக் கடிதத்தை வழங்கியது.

chennai metro

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.,) மாதவரம் பால் காலனியில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலான காரிடார்-3ல் கட்டம்-3ல் ரயில் பாதை அமைப்பதற்காக லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

சமீபத்தில் 299 கோடி ரூபாய்க்கு லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.,) ஏற்புக் கடிதத்தை வழங்கியது.

“ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால், மாதவரம் பால் காலனி முதல் சோழிங்கநல்லூர் காரிடார்-3 வரையிலான பகுதிகளில், ரயில் பாதை அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட ஒப்பந்தமானது JICA நிதியுதவியின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுவே கட்டம்- 2 க்கு வழங்கப்பட்ட கடைசி டிராக் டெண்டர் ஆகும்.

இந்த திட்டத்தின் இயக்குனரான டி.அர்ச்சுனன், துணை தலைவர் சுனில் கட்டார், ஹெட்- மெட்ரோ வணிகப் பிரிவு, மற்றும் L&T நிறுவனம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai metro rail signs contract to install tracks in phase 2