Advertisment

மெட்ரோ பார்க்கிங் கட்டணத்தில் தள்ளுபடி: ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பார்க்கிங் கட்டணத்தில் தள்ளுபடியை வழங்க உள்ளது.

author-image
WebDesk
Jun 07, 2023 11:37 IST
chennai metro

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தும் பயணிகள் மற்றும் ஜூன் 7, புதன்கிழமை ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்கள் ஒரு நாள் பார்க்கிங் கட்டணத்தில் தள்ளுபடியைப் பெறலாம்.

Advertisment

மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த அதிக பயணிகளை ஊக்குவிப்பதற்காகவே வாகன நிறுத்தத்திற்கான தள்ளுபடி கட்டணங்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

"கடந்த 30 நாட்களில் பயணிகளின் பயண வரலாறு மற்றும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மாதாந்திர பார்க்கிங் பாஸில் தள்ளுபடியை இந்த சலுகை செயல்படுத்துகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் நிலையத்தின் பார்க்கிங் ஊழியர்களை தொடர்பு கொள்ளவும், CMRL இணையதளத்தில் பார்க்கிங் கட்டண விவரங்களையும், தள்ளுபடிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களையும் பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai Metro #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment