இனி சென்னை முழுக்க மெட்ரோவில் பயணிக்கலாம்!

தற்போது மெட்ரோ வழித்தட பாதைகளில் மண் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான பணி தீவிரமடைந்துள்ளது. தற்போது 118.9 கி.மீ தூரத்திற்கான மெட்ரோ வழித்தட மேப் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ரூ.85,047 கோடி செலவில் மாதவரம்-சிப்காட், கோயம்பேடு- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயிலுக்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-ம் வழித்தடத்திற்காக மதுரவாயல் மற்றும் போரூர் கிராமங்களில் உள்ள பகுதிகளை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கோயம்பேடு முதல் கலங்கரை விளக்கம் வரை திட்டமிடப்பட்டிருந்த மெட்ரோ சேவை, ஐயப்பந்தாங்கல், போரூர் போன்ற பகுதிகளின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பூந்தமல்லி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது மெட்ரோ வழித்தட பாதைகளில் மண் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

45 கி.மீ கொண்ட முதற்கட்ட மெட்ரோவுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், நிறைய சின்ன சின்ன ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.

பிறகென்ன இனி சென்னை முழுக்க மெட்ரோவில் வலம் வரலாம்!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close