சென்னை மெட்ரோ ஸ்டேசன்களில் குறிப்பாக சுரங்கப்பாதை ஸ்டேசன்களில் ஏசிக்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது மற்றும் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால், மிகவும் பாதிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரின் போக்குவரத்து தேவைக்காக, மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் ஸ்டேசன்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருப்பதால், அங்கு இயல்பான நிலையை காட்டிலும் காற்றோட்ட வசதி குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக, மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளின் வசதிக்காக, ஆங்காங்கே பேன்கள் மட்டுமல்லாது, ஏசி சாதனங்களையும் பொருத்தியது.
சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஏசிக்களின் செயல்பாடு சமீபத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. பேன்களும், ஆங்காங்கே மட்டும் பொருத்தப்பட்டுள்ளதால், பீக் அவர்களில், பேன்களில் கீழ் தஞ்சம் அடைபவர்களின் நிலை அதிகமாக உள்ளதால், மற்றவர்கள் படும் பாடு சொல்லித்தெரிவதில்லை. பீக் அவர்களில், சுரங்கப்பாதை மெட்ரோ ஸ்டேசனில் நிற்கும் சிறிது நேரத்தில் ஏற்படும் வியர்வையை துடைக்கவே, ஒரு டஜன் கர்சீப் வேண்டும் என்று பயணிகள் ஆங்காங்கே புலம்புவதை நம்மால் கேட்க முடிகிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ஸ்டேசன்களளை நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்டேசன்களில் பயணிகளின் நிலை, சொல்லமுடியாத அளவில் இருப்பதாக தினசரி பயணிக்கும் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் வரும் போது அதிலிருந்து வரும் காற்றே, தங்களுக்கு பேரானந்தமாக இருக்கிறது. மற்றபடி, காற்றுக்கு வேறு எந்த வசதியோ, சரியான காற்றோட்ட வசதிகளோ பல மெட்ரோக்களில் இல்லை என்று மற்றொரு பயணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் ACக்கள் பொருத்தப்பட்டன. இவைகளின் பயன்பாட்டிற்கு தினமும் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியதை தொடர்ந்து ஏசிக்களின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது உண்மை தான் என்றாலும், சுரங்கப்பாதை ரயில்வே ஸ்டேசன்களில், ஆங்காங்கே BLOWERSகள் பொருத்தப்பட்டு சீரான காற்றோட்டத்திற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை நிலைமை தற்போது சீரானதை தொடர்ந்து, பீக் அவர்களில், புளோயர்களுடன் ஏசிக்களும் செயல்பட்டு வருவதாகவும், பீக் அவர்கள் இல்லாத நேரங்களில் மட்டும் புளோயர்கள் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.