சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர கடைகள் அமைக்க இடவசதி ஏற்படுத்தி உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேரு பூங்கா, சைதாபேட்டை, அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, மத்திய சதுக்கம், மண்ணடி, விம்கோ நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் 3,000 சதுர மீட்டர் முதல் 10,000 சதுர மீட்டர் வரை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது.
இந்த நிலங்களில் அரசு அலுவலகங்கள், அரசு சாரா மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை அமைக்க தேவையான இட வசதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் இந்த இடங்களில் வணிக வளாகங்கள் அமைக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதி இயக்குனர் டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும், இங்குள்ள இட வசதியை பெற விரும்பும் வணிகர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தொடர்பு கொண்டு பிற தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil