Advertisment

சென்னை மெட்ரோ ரயில் முதல் வகுப்பு பெட்டியில் பெண்களுக்கு மட்டும் அனுமதி

பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நவம்பர் 23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
chennai metro train, cmrl, சென்னை மெட்ரோ ரயில், சென்னை, மெட்ரோ ரயிலில் நவம்பர் 23 முதல் பெண்களுக்கு மட்டும் அனுமதி, chennai metro train first class compartment only for women, chennai

பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நவம்பர் 23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

Advertisment

சென்னையில் மெட்ரோ ரயில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள முதல் வகுப்பு பெட்டியில் ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவரும் பயணிக்கலாம் என்றிருந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நவம்பர் 23ம் தேதி முதல் மகளிர் மட்டும் பயணிக்கும் பிரத்யேகமான பெட்டிகளாக மாற்றபடுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பாதாவது, “வருகின்ற 23.11.2020 (திங்கள்கிழமை) முதல் மெட்ரோ ரயிலில் உள்ள முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எப்போதும் மகளிர் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தினரை வழங்கி வருகிறது. பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க பல முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 23.11.2020 (திங்கள்கிழமை) முதல் சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதன் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது மகளிர் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்திட முடியும். தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம்.

இதை தவிர, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் கண்காணிப்புக் கேமிராக்கள் மூலம் முழு நேரமும் முமையாக கண்காணிப்பது, மகளிருக்கென தனி கழிப்பறைகள், வாடிக்கையாளர் சேவை வசதிகள், மது அருந்தியவர்கள் பயணிக்கத் தடை, புகை பிடிப்பதற்கு தடை மற்றும் பிற இடையூறுகளில் இருந்து பாதுகாப்பது, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை பணியமர்த்தி கண்காணிக்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளது.

இதன் மூலம், நவம்பர் 23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகளில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai Metro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment