தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விரைவாக ஓர் இடத்திற்கு செல்லவும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது பச்சை மற்றும் நீலம் என இரண்டு வழித்தடங்கள் வாயிலாக 54 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. பள்ளி, கல்லூரி செல்பவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்பவர்களுக்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்காக ஆன்லைன் வழியாகவும், அந்தந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்கள் மூலமாகவும் டிக்கெட் பெற்று பயணம் செய்யலாம். அந்த வகையில் இன்று (டிச.17) காலை பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முயன்ற நிலையில் சர்வர் கோளாறு ஏற்பட்டு டிக்கெட் பெய முடியவில்லை.
இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். சர்வர் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதுவரை கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் சிறிதுநேரத்தில் மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை சீரானது என நிர்வாகம் அறிவித்தது. சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டுகள், மொபைல் க்யூஆர் மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“