சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ ரயிலின் பெட்டிகளை நான்கில் இருந்து ஆறாக உயர்த்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மெட்ரோவில் ஒரு நாளுக்கு சராசரியாக இரண்டு லட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிக்கிறது.
இதனால் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முதலாம் கட்டத்தின் கீழ் இயக்கப்படும் ரயில்களில், கூடுதலாக இரண்டு குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று பொது பெட்டிகளும், ஒரு மகளிர் பேட்டியும் இருப்பதால், இத்துடன் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைத்து ஆறு பெட்டிகளாக மாற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.