Advertisment

பூந்தமல்லி- பரந்தூர் மெட்ரோ வழித்தடம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 1.74 கோடிக்கு கையெழுத்தானது.

author-image
WebDesk
New Update
chennai metro services

Chennai Metro

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தையும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிகள் நடைபெறும் 3 வழித்தடங்களையும் நீட்டிக்க திட்டமிடப்பட்டது.

இதில் ஒன்றான கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 43 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்து

தற்போது, பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ஆர்வி அசோசியேட் நிறுவனத்திற்கு (M/s Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt) ரூ.1.74 கோடி கையெழுத்தாகி உள்ளது, இதற்கான ஏற்பு கடிதம் ஆர்வி அசோசியேட் நிறுவனத்திற்கு கடந்த ஜூன் 11ம் தேதி வழங்கப்பட்டதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த புதிய வழித்தடம் தோராயமாக 43.63 கிலோ மீட்டர் நீளத்திற்கு 9 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது.

முழு நீளத்திற்கும் ட்ரோன்களைப் பயன்படுத்தி மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் நவம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment