சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் குழாய்களை இணைக்கும் பணியை மேற்கொள்வதால், சென்னயில் உள்ள 4, 5, 6, 8 , 9 ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகள் அவற்றின் விநியோகத்தில் இடையூறுகள் இருக்கும் என்று சென்னை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், கீழ்ப்பாக்கம் குடிநீர் இணைப்புகளில் இருந்து பெரிய குழாய்களை இணைக்கும் பணியை மேற்கொள்வதால், சென்னையின் சில பகுதிகளுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி காலை 10 மணி வரை குழாய் நீர் விநியோகம் தடைபடும் என்று அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டலம் 4 தண்டையார்பேட்டை, மண்டலம் 5 ராயபுரம், மண்டலம் 6 திரு.வி.க.நகர், மண்டலம் 8 அண்ணா நகர், மண்டலம் 9 தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களின் கீழ் வரும் பகுதிகளில் பணிகள் முடியும் வரை புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படாது என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பூர், புதுப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, பார்க் டவுன், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கெல்லிஸ், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் தண்ணீர் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் உடனடித் தேவைகளுக்காக தண்ணீர் டேங்கர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். தெருவில் குடிநீர் விநியோகத்திற்காக தண்ணீர் ஏஜென்சி டேங்கர் பயணங்களை இயக்கும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“