சென்னையில் மக்கள் குடிநீர் அணுகுவதற்கும், புதிய இணைப்புகளை பெறுவதற்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி வசதியாக சென்னை மெட்ரோவாட்டர் போர்ட்டலை மேம்படுத்தியுள்ளனர்.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மற்றும் பெரிய வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் தண்ணீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான செயல்முறைகளை சென்னை மெட்ரோவாட்டர் மேம்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளனர்.
சென்னையில் உள்ள இரண்டு மாடி கட்டிடங்களின் நுகர்வோருக்கு, ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் சேவையை இப்போது நிறுவனம் வழங்குகிறது.
இரண்டு தளங்களுக்கு மேல் உள்ள கட்டடங்களில் வசிப்போர், மெட்ரோவாட்டர் பெறுவதற்கு தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்கின்றனர். மூன்று மாதங்களில் போர்ட்டல் புதுப்பிக்கப்பட்டால், அனைத்து வகையான கட்டிடங்களின் நுகர்வோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
கடந்த ஆண்டு 17,135 புதிய குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் கிட்டத்தட்ட 1,059 இணைப்புகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
500 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த கட்டிடங்களுக்கு ₹200 சலுகை விலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
சென்னையின் முக்கிய பகுதிகளில் 13.9 லட்சம் மதிப்பீட்டாளர்கள் மற்றும் 8.3 லட்சம் நுகர்வோர் உள்ளனர். சுமார் 48% குடியிருப்பாளர்கள் இணையதளம் மூலம் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil