சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், 3 மாதங்களில் தண்ணீர் பயன்பாட்டை அளவிடும், மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க உள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும், வணிக வளாகத்திற்கும் தண்ணீர் வழங்கி வருகிறது. இந்நிலையில் இதில் வழங்கப்படும் தண்ணீருக்கு இதுவரை மீட்டர் பொருத்தப்படவில்லை. இன்னும் 3 மாதங்களில் வழங்கப்படும் தண்ணீரை அளவிடம் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார் கூறுகையில் “ இதற்கான ஆவணங்களை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம். இதைத்தொடர்ந்து இதற்கான ஏலம் விடும் வழிமுறை தொடங்கும்” என்று கூறினார்.
2019 நவம்பர் வரை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் 24,000 மீட்டர் குடிநீர் இணைப்பை கொடுத்துள்ளது. இதன் மூலம் 2021-2022-க்குள் 57 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2023ம் முடிவில், அதிக பயன்பட்டில் உள்ள இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மீட்டர் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது. தண்ணீருக்கு பணம் செலுத்தும் தகுதி அதிகம் உடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலில் தொடங்க உள்ளதாக இயக்குநர் கிர்லோஷ்குமார் கூறியுள்ளார்.
தண்ணீர் தொட்டியின் அருகில் இந்த மீட்டர் வைக்கப்படும். இதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டின் அளவு பதிவு செய்யப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் எவ்வளவு தண்ணீர் அளவை பயன்படுத்துகிறார்கள் என்பதை கணக்கில் வைத்துக்கொண்டு இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். பயன்பாட்டை பொருத்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மின்சார பயன்பாட்டை அறிவதுபோலத்தான் இந்த திட்டமும் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”