Advertisment

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 100 இ-பஸ் வசதி: முதற்கட்டமாக சென்னையில் தொடக்கம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் புதியதாக இ-பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
TN EBUs

தமிழகபத்தில் இ-பஸ் வசதி

இந்தியாவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயங்கும் பெரு நகரங்களின் பட்டியலில் தற்போது புதிதாக சென்னை இணைந்துள்ளது. சென்னை மாநகரக போக்குவரத்து கழகம் (எம்.டி.சி) புதிதாக 100 இ-பேருந்துகளை வாங்கவுள்ள நிலையில், இந்த பேருந்துகளை வழங்கும் நிறுவனம் சார்பில், பேருந்து இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் பணிகள் டெண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட் உள்ளது.

Advertisment

புதிதாக வாங்கப்படும் இந்த இ-பேருந்துகள்,35 இருக்கைகளுடன் (2+1 முறை) 70 பேர் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இந்த தாழ்தள ஏசி பேருந்துகள் அடையாறு மற்றும் சென்ட்ரல் (பல்லவன் சாலை) டெப்போக்களில் இருந்து 29சி (திருவான்மியூர்-பெரம்பூர்), 570 உட்பட 27 வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் (கேளம்பாக்கம்-கோயம்பேடு) மற்றும் 40A (அண்ணா சதுக்கம்-பட்டாபிராம்) தாம்பரம், பிராட்வே, திருப்போரூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற போக்குவரத்து மையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும்.

இந்த இ-பேருந்துகளை வாங்குவதற்கு, சுமார் 1.2 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பேருந்துகளிலும் 8 மணி நேர திறன் கொண்ட பேட்டரிகள் இருக்கும் மற்றும் பகல் இடைவேளையின் போது 30 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். இந்த பேருந்துகளை வாங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் இரண்டு டிப்போக்களிலும் சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும், மேலும் இந்த அமைப்பு மூலம் 4 மணிநேரம் ஒரே இரவில் சார்ஜ் செய்ய வசதி செய்யப்பட உள்ளது. ஜெர்மன் வங்கியில் (KfW) வாங்கிய கடனைப் பயன்படுத்தி ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திற்கு அரசாங்கம் பணத்தை முன்கூட்டியே செலுத்தும்.

இந்த இ-பேருந்துகள் மூலம் வரும் முழு டிக்கெட் வருவாயையும் பெறும் எம்டிசி, வேலை நேரத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும். தவிர, முதன்முறையாக, 100 இ-பேருந்துகளை இயக்க எம்.டி.சி (MTC) பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக, தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை சப்ளை செய்யும், மேலும் அவர்களுக்கு தனியாக பணம் செலுத்தப்படும்.

கடந்த சில சந்தர்ப்பங்களில், இதுபோன்ற 'அரை தனியார்மயமாக்கல்' முயற்சிகள் போக்குவரத்து ஊழியர் சங்கங்களை அதிருப்தியடைய செய்த நிலையில், புதிதாக பணியமர்த்தப்படும் இளம் ஓட்டுநர்களுக்கு வாகனங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்காக மாநில போக்குவரத்துத் துறையானது சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது.

இது குறித்து பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.டி.சி.யின் அனைத்து மெக்கானிக்கள் மற்றும் பேருந்து பணியாளர்கள் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட பேருந்துகளை மட்டுமே கையாண்டனர். "எங்களுக்கு மின்சார இயக்கத்தில் நிபுணத்துவம் இல்லை, பயிற்சி வசதிகள் இல்லை. எனவே, அதை சப்ளையர்களிடம் விட்டுவிடுவது நல்லது. நாங்கள் அதை தொழிற்சங்கங்களுக்கு விளக்கியுள்ளோம், அவர்கள் ஒப்புக்கொண்டனர். சென்னையில் உள்ள முன்னோடித் திட்டம் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள மற்ற நகரங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment