சென்னை மக்கள் மெட்ரோ குடிநீர் வசதிக்கான வரியைச் செலுத்த கவுன்ட்டர்களில் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், தொந்தரவில்லாத டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் அக்டோபர் 1-ம் தேதி முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) செப்டம்பர் 30- க்குப் பிறகு, குடிநீர் வரிக்கான கட்டணத் தொகையை ரொக்கமாக ஏற்காது என்று தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், அக்டோபர் 1-ம் தேதி முதல், குடிநீர் வரியை டிஜிட்டல் முறையிலும், இ-சேவை மையங்கள் மூலமும், ஆன்லைன் வழியாகவும், காசோலை மற்றும் வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) மூலமும்செலுத்தலாம். அக்டோபர் 1-ம் தேதி முதல் ரொக்கமாக பணம் செலுத்துவதற்கான கவுன்டர்கள் செயல்படாது. மக்கள் கவுன்டர்களில் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், சிக்கலற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அதன் அனைத்து பகுதி டிப்போ அலுவலகங்களிலும் காசோலைகள் மற்றும் டிமாண்ட் டிராப்ட்களை அளிக்க பெட்டிகளை வழங்கியுள்ளது. UPI, QR குறியீடு மற்றும் PoS முறைகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“