scorecardresearch

ஏப்ரல் 1ம் தேதி முதல் நுகர்வோர் அட்டை இல்லை: சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம்

இந்த அட்டைகள் 2024-25 வரை வழங்கப்படும் என்று இருந்த நிலை, தற்போதுள்ள கார்டுகளை, ஏப்ரல் 1 முதல் நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் நுகர்வோர் அட்டை இல்லை: சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நுகர்வோர் அட்டைகள் வழங்குவதை நிறுத்துகிறது.

சென்னையில் வசிப்பவர்கள் டிஜிட்டல் கட்டண பரிமுதலை ஊக்குவிக்கவும், கவுண்டர்களில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் நுகர்வோர் அட்டைகளை வழங்கும் முறையைக் கைவிட ஏஜென்சி திட்டமிட்டுள்ளது.

நகரில் முக்கிய மற்றும் இணைக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 13.9 லட்சம் மதிப்பீட்டாளர்கள் மற்றும் 8.3 லட்சம் நுகர்வோர் உள்ளனர். இதில், கிட்டத்தட்ட 48% குடியிருப்பாளர்கள் இணையதளம் மூலம் வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.

குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை பதிவு செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகள் 2024-25 வரை வழங்கப்படும் என்று இருந்த நிலை, தற்போதுள்ள கார்டுகளை, ஏப்ரல் 1 முதல் நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

வாட்டர் ஏஜென்சி இணையதளத்தில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்துவதற்கான வழிமுறைகளை மேம்படுத்தியுள்ளது. மேலும் பணம் செலுத்துவதற்கான UPI, QR குறியீடு மற்றும் PoS முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குடியிருப்பாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் டவுன்லோட் ரசீதுகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai metrowater will stop providing consumer cards from april 1st

Best of Express