Advertisment

சென்னையில் இயற்கை எரிவாயுவில் இயக்கப்பட்ட அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்து பேருந்து

பிற்பகல் 2 மணியளவில் பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் நோக்கிச் சென்ற பேருந்து (102 கட்) அடையாரில் உள்ள எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

author-image
WebDesk
New Update
Chennai mtc

Chennai

சமீபத்தில் சோதனைக்காக டீசலுக்கு பதிலாக இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் வகையில் மாற்றப்பட்ட MTC பேருந்து செவ்வாய்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

Advertisment

பேருந்தில் 10 பயணிகள் இருந்தனர், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

பிற்பகல் 2 மணியளவில் பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் நோக்கிச் சென்ற பேருந்து (102 கட்) அடையாரில் உள்ள எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கியர்பாக்ஸில் இருந்து புகை வெளியேறியதைக் கண்ட டிரைவர், அடையாறு பேருந்து நிறுத்தத்திற்கு சுமார் 200 மீட்டர் முன்பு வாகனத்தை நிறுத்தினார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிரைவர் உடனே பயணிகளை பேருந்தில் இருந்து கீழே இறக்கினார்.

சில நிமிடங்களில் கியர்பாக்ஸ் மற்றும் எரிபொருள் டேங்க் தீப்பிடித்து, பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

முன்னெச்சரிக்கையாக, எல்.பி.ரோட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் இருந்த ஊழியர்களை போலீசார் வெளியேற்றினர்.

இந்த BS IV ரக பழைய பேருந்து சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, சோதனைக்காக இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டோரண்ட் கேஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஆதரவுடன், சென்னை எரிவாயு நிலைய நிறுவனத்தால் (Chennai Gas Station Company) CNG கிட் மாற்றப்பட்டது.

இந்த பஸ் ஜூலை 27 முதல் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் (MTC) நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விபத்துக்கான காரணம் குறித்து எம்டிசி மற்றும் தனியார் நிறுவன தொழில்நுட்பக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகுதான் விபத்துக்கான காரணம் தெரியவரும்.

அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு நிலையத்தால் CNGக்கு மாற்றப்பட்டது. மேற்கு சைதாப்பேட்டை-ஸ்ரீபெரும்புதூர் (553W) வழித்தடங்களில் திரவ இயற்கை எரிவாயு (LNG) மூலம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டு எம்டிசி பேருந்துகள் ஜூன் 13 முதல் சோதனைக்காக இயக்கப்படுகின்றன, என்றார்.

மாற்றும் கருவிகளில் காணப்பட்ட வெளிநாட்டு பொருட்களே இந்த தீ விபத்துகளுக்கு வழிவகுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கீகாரம் பெறாத கேரேஜ்களில், டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை சிஎன்ஜி அல்லது எல்பிஜியாக மாற்றக்கூடாது என கடந்த மாதம் போக்குவரத்துத் துறை எச்சரித்தது. கோயம்புத்தூர் மற்றும் பிற இடங்களில் கார்கள் ஓட்டும்போது தீப்பிடித்த சில சம்பவங்களைத் தொடர்ந்து இந்த அறிவுரை வழங்கப்பட்டது.

இதனிடையே, புதிய பேருந்துகள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் தான் இந்தச் சம்பவத்துக்கு காரணம். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தர சோதனை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி,அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment