தோழியின் தந்தையை, பெண் ஒருவர் கண் மற்றும் வாயில் பெவிகுயிக் ஊற்றி, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், சென்னையில் அரங்கேறியுள்ளது.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு பகுதியில் ஆண் பிணம் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் வந்தனர். சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், அவர் திருவொற்றியூர், சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பதும், கற்பூரம் வியாபாரம் அவர் செய்து வந்ததும் தெரியவந்தது.
சேகரின் மகளும் திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஒன்றாகப் படித்துள்ளனர். இதனால் சேகரின் வீட்டுக்கு அந்தப் பெண் அடிக்கடி சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை என்ற முறையில் சேகருடன் பழகியுள்ளார். தற்போது அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வந்துள்ளது. அதனால் சேகருடன் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்துள்ளார். இது, சேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சேகர், நீயும் நானும் பழகியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், சேகர் உயிரோடு இருந்தால் நிச்சயம் தனக்கு ஆபத்து என்று கருதியுள்ளார். இதனால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். நேற்று மதியம் சேகருக்குப் போன் செய்தவர், உங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சேகரும் சம்மதித்துள்ளார்.
புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அம்மணி அம்மன் திட்ட சாலையில் இருவரும் நின்று பேசியுள்ளனர். அப்போதுதான் அந்தப் பெண், “கண்ணை மூடிக்கொள்ளுங்கள், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன்” என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட சேகரும் சந்தோஷத்துடன் கண்ணை மூடியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த பெவிகுவிக் பசையை சேகரின் முகத்தில் ஊற்றியுள்ளார். இது என்ன என்று சேகர் யோசிப்பதற்குள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேகரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பெவிகுவிக் சேகரின் வாய்ப் பகுதியில் ஒட்டிக்கொண்டதால் அவரால் சத்தம் போட முடியவில்லை. இதையடுத்து, அந்தப் பெண் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, “தோழியின் தந்தை சேகரிடம் நான் முதலில் நட்பாகத்தான் பழகினேன். ஆனால், நாளடைவில் அந்தப் பழக்கம் பாதைமாறிவிட்டது. அதனால்தான் இந்தநிலைமைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chennai murder woman arrested to kill friends father in chennai