அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்த சென்னை முஸ்லிம் தொழிலதிபர்

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தன்னார்வலர்களுடன் இந்து முன்னணி உறுப்பினர்கள் இணைந்து அவரை அணுகியபோது, டபிள்யூ எஸ் ஹபிப் ரூ.1,00,008-க்கு காசோலையை நன்கொடையாக அளித்து நிதி திரட்டுபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தன்னார்வலர்களுடன் இந்து முன்னணி உறுப்பினர்கள் இணைந்து அவரை அணுகியபோது, டபிள்யூ எஸ் ஹபிப் ரூ.1,00,008-க்கு காசோலையை நன்கொடையாக அளித்து நிதி திரட்டுபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ayodhya Ram Temple, Chennai businessman donation Ayodhya temple, chennai muslim businessman donates, சென்னை முஸ்லிம் தொழிலதிபர் நன்கொடை, ராமர் கோயிலுக்கு முஸ்லிம் தொழிலதிபர் நன்கொடை, அயோத்தி ராமர் கோயில், சென்னை, முஸ்லிம் Muslim man donation Ayodhya temple, Ram temple donations, Tamil Indian Express

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு தமிழ்நாட்டில் இருந்து பக்தர்கள் பங்களிப்பு அளித்துவரும் நிலையில், மத நல்லிணக்க நோக்கத்தில் சென்னையைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

Advertisment

அயோத்தியில் முன்மொழியப்பட்ட ராமர் கோயிலை கட்டுவதற்காக தினக் கூலி தொழிலாளர்களான செருப்பு தைப்பவர்கள் உள்பட சிறுவணிகர்கள் என பலரும் தங்கள் பங்களிப்புகளை வழங்குபவர்களாக உள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அமைத்த ஸ்ரீ ராம ஜெனமபூமி தீர்த்த க்ஷேத்ர (எஸ்.ஆர்.ஜே.டி.கே), ரூ.10 முதல் ரூ.100 மற்றும் ரூ.1,000 நன்கொடை கூப்பன்களை வழங்க முன்வந்ததால் ஏராளமான மக்கள் நன்கொடை அளிக்க முன்வந்ததாக கோயிலுக்கு நிதி திரட்டுவதில் ஈடுபட்டுள்ள வி.எச்.பி மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.வி.சீனிவாசன் தெரிவித்தார்.

“நாங்கள் அணுகிய அனைவருமே உன்னதமான காரணத்திற்காக நன்கொடை அளிப்பதில் தாராளமாக இருந்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தன்னார்வலர்களுடன் இந்து முன்னணி உறுப்பினர்கள் இணைந்து அவரை அணுகியபோது, டபிள்யூ எஸ் ஹபிப் ரூ.1,00,008-க்கு காசோலையை நன்கொடையாக அளித்து நிதி திரட்டுபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

“முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் மத நல்லிணக்க நட்பை வளர்க்க விரும்புகிறேன். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். இந்த நம்பிக்கையுடன் நான் இந்த தொகையை நன்கொடையாக அளித்தேன்” என்று ஒரு தொழிலதிபர் ஹபீப் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் முஸ்லிம்கள் சில பிரிவுகளால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்லது இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று வர்ணிக்கப்படுவதைக் கண்டு வேதனையடைவதாக அவர் கூறினார்.

ஒரு நல்ல காரணத்திற்காக நன்கொடை வழங்குவதில் தவறில்லை என்று சுட்டிக்காட்டிய ஹபீப், “நான் வேறு எந்த கோவில் என்றால் நன்கொடை அளித்திருக்க மாட்டேன். ஆனால், பல ஆண்டுகள் பழமையான அயோத்தி சர்ச்சை முடிவுக்கு வந்ததால் ராமர் கோயில் வேறுபட்டது” என்று குறிப்பிட்டார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்து முன்னணியும் நிதி திரட்டுவதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்று ஹபிப் கூறினார்.

“நாங்கள் அணுகிய அனைவரும் விருப்பத்துடன் நன்கொடை அளித்தனர். கூட்டத்தில் இருந்து திடீரென வெளிவந்த ஒரு மனிதர் ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கினார். ராம பக்தர்களிடமிருந்து வந்த பதில் மிகப்பெரியது” என்று இந்து முன்னணியின் சென்னை தலைவர் ஏ.டி.இளங்கோவன் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.-ஸின் ஒரு பிரிவான தர்ம ஜாக்ரன் மஞ்சின் அமைப்பின் சென்னை அமைப்பாளர் கே.இ.சீனிவாசன் கூறுகையில், சமூகத்தில் வசதியானவர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் பங்களித்துள்ளனர் என்று கூறினார்.

“உதாரணமாக, பெரம்பூரில், செருப்பு தைப்பவர்களும் பிற பிரிவுகளும் ரூ.10 நன்கொடை வழங்க முன்வந்தனர்” என்று அவர் கூறினார்.

கொடுங்கையூரில் உறுப்பினர்கள் கோயில் கட்டுமானத்திற்காக நிதி கோரியபோது, ​​கடை பராமரிப்பாளர்கள் தங்களிடம் இருந்த சில்லரைகளை நன்கொடையாக வழங்கினார்கள்.

ஒரு கோவிலுக்கு அருகே உற்சாகமாக குங்குமம் விற்பனை செய்துகொண்டிருந்த முஸ்லிம் ஒருவர் ரூ.200 நன்கொடை கொடுத்தார்.

காஞ்சி காமகோடி பீடம் ஏற்கனவே பக்தர்களிடம் தாராளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆன்மீக மற்றும் கலாச்சார சேவை அமைப்பான ஜனகல்யாண் தனது அலுவலகத்தை பல முக்கிய நபர்களுடன் பயன்படுத்தி இந்த முயற்சிக்கு பங்களிப்பு செய்வதாக அதன் நகர செயலாளர் வி.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பழமையான சர்ச்சையை தீர்த்து, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு அறக்கட்டளையால் ராமர் கோயில் கட்டுவதற்கு வழி வகுத்தது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள புனித நகரத்தில் ஒரு முக்கிய இடத்தில் ஒரு புதிய மசூதியைக் கட்டுவதற்காக சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ஒரு பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Muslim Chennai Ram Temple Ayodhya Temple

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: