சென்னைக்கும் மைசூருக்கும் இடையே அதிவேக ரயில் பாதை, அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அப்பாதை பெங்களூரு வழியாக அமைப்பதற்கு, நிலம் கையகப்படுத்துவதை குறித்து ஆலோசிப்பதற்காக உயர்மட்ட கூட்டத்தை கூட்டவுள்ளது.
2014ல் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திடம் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கூறியது.
அதைத் தொடர்ந்து, அதற்கேற்ற நிலத்தை கண்டறிந்து கையகப்படுத்துவதற்கான வழிமுறைகளை இறுதி செய்ய மாநில அரசு முடிவு செய்ததாக உள்கட்டமைப்பு அமைச்சர் வி.சோமண்ணா கூறினார்.
“பெங்களூரு மற்றும் மைசூரு இடையே 10 வழிச்சாலையில் நடைபாதை அமைக்க முன்மொழிவு உள்ளது. கூட்டத்தில் இதைப்பற்றி விவாதிப்போம்,” என்றார். 1.2 லட்சம் கோடி செலவில் நடைபாதை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
முனிராபாத்-மஹ்பூப்நகர், துமகுரு-ராயதுர்கா, சிக்கமகளூரு-பேலூர், துமகுரு-தாவணகெரே உள்ளிட்ட ஒன்பது புதிய ரயில் பாதைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது, அவற்றிற்கு மாநில அரசு ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணிகள் 2 ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச புல்லட் ரயில் மைசூரிலிருந்து சென்னைக்கு 435 கிமீ தூரத்தை கடப்பதற்கு சுமார் மூன்று மணி நேரம் எடுக்கும். தற்போது, அப்பாதையில் பயணிக்கும் ரயிலிற்கு 8-9 மணி நேரம் தேவைப்படுகிறது. இதை விரைவுபடுத்துவதற்காக புதிய திட்டம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“